மைக்ரோசாப்ட் வழங்கும் MVP விருதுகள்

April 7, 2009 at 3:41 pm | Posted in Uncategorized | Leave a comment

 

மைக்ரோசாப்ட் நிறுவனமானது MVP எனப்படும் விருதினை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வழங்குகிறது.

வலைப்பூக்கள், இணையக் குழுமங்கள், விக்கிஸ், கலந்துரையாடல்கள் முதலியவற்றில் யாரெல்லாம் மிகத் துடிப்பாக இருக்கின்றனரோ அவர்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள்.

microsoftmvpமைக்ரோசாப்ட்டின் ஏதேனும் ஒரு தொழில்நுட்பத்தில் சிறப்பு அனுபவமோ, திறமையோ இருந்தால் தான் இந்த விருது கிடைக்கும் என்பது கிடையாது.

தொழில்நுட்ப வலைப்பூக்களில் இணையத்திற்கான பயன்பாடுகள் குறித்தோ, நுகர்வோர்க்கான மென்பொருட்களைப் பற்றியோ எழுதும் அளவுக்குத் திறமை கொண்டிருந்தாலே இந்த விருதினை வாங்குவதற்கான தகுதி உங்களுக்கு உண்டு.

தற்போதைய நடப்பு MVP மேதைகளைப் பற்றி அறிந்து கொள்ளஇங்கே சொடுக்கவும்.

இந்தியாவில் இருப்பவர்கள் தானும் ஒரு MVP ஆகவேண்டும் என நினைத்தால் இங்கே சொடுக்கி அங்கே அவர்கள் கேட்கும் தகவல்களை நிரப்பி ஏப்ரல் 18க்குள் அனுப்பி வைக்கவும்.

ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை MVP விருது வழங்கப்படுகிறது. இந்த முறை கிடைக்க வில்லையெனில் அடுத்தமுறை 3 மாதம் கழிந்த பிறகு முயற்சிக்கலாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட சுற்றறிக்கைப் பயனர்களுக்கான அனைத்து வசதிகளையும் நீங்கள் ஒரு MVP ஆக இருந்தால் அனுபவிக்கலாம்.

அவர்கள் வழங்கும் மென்பொருள் பீட்டா வெர்சன்கள், தனிச்சுற்றுக்கு மட்டும் என வழங்கப்படும் செய்திக் குழுமங்கள், ஏராளமான மென்புத்தகங்கள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் அனுபவ அறிவு மேலும் அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் ஒரு MVP ஆக இருந்தால்http://lakequincy.com/ விளம்பர நிறுவனம் வழங்கும் விளம்பரங்களை உங்கள் தளத்தில் காண்பிப்பதற்கு இயலும்.

MVP விருது குறித்து மேலும் விபரங்களுக்கு இந்த பிடிஎஃப்கோப்பினைத் தரவிறக்கவும்.

கலைச்சொற்கள் :

MVP – Microsoft Most Valuable Professional
விக்கிஸ் – Wikis
இணையக் குழுமங்கள் – User group, Internet Forums
கலந்துரையாடல்கள் – Conference
தனிச்சுற்றறிக்கை – Private Circulation
மென்புத்தகங்கள் – Electronic Books -Ezines
பிடிஎஃப் – Portable document format (PDF)
கோப்பு – File
பீட்டா வெர்சன்கள் – Beta Versions

Advertisements

Leave a Comment »

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.
Entries and comments feeds.

%d bloggers like this: