பாராளுமன்றத் தேர்தலும் கூகிளின் புதிய சேவையும்

April 7, 2009 at 3:33 pm | Posted in Uncategorized | Leave a comment

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறப் போகும் இவ்வேளையில் தேர்தல் களப்பணியில் கூகிள் நிறுவனமும் இணைகிறது.

பொதுத்துறை செய்தி நிறுவனங்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் (Television channels) ஆகியவை ஏற்கனவே முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் தனியாகக் கருத்துக்கணிப்புகளை (Election Surveys) நடத்திக் கொண்டிருக்கின்றன.

06-ஏப்ரல்-2009 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) நட்புறவுடன் கூகிள் நிறுவனத்தின் இந்தியத் தேர்தல்மையம் (Google India Elections Center) ஆரம்பமானது. இந்தியத் தேர்தல் வரலாற்றில் இது ஒரு மைல்கல்.

இந்தக் Google நிறுவனத்தின் தேர்தல் மையத்தில் என்ன சேவைகள் வழங்கப்படுகின்றன? என்ன என்ன தேவைகளுக்காக இந்த மையத்தை நாடலாம்?

1. ஒரு வாக்காளரானவர் தான் எங்கே எந்தப் பகுதியில் (polling location) ஓட்டளிக்கப் போகிறோம் என்பதைக் காண்பதற்காக

2. அவரது தொகுதியின் மேப் வரைபடம் (Map) ஆகியவற்றைக் கண்ணுறவதற்காக

3. தொகுதி தொடர்புடைய மேலதிகத் தகவல்கள் -வலைப்பூக்கள் (blogs), காணொளிகள்(videos), மேற்கோள்கள் (quotes) ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள

4. தான் வாக்களிக்கப் போகிற தொகுதியின் முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொள்ள

5. தற்போதைய நடப்பு MP மற்றும் அதே தொகுதியின் முந்தைய MPகள் ஆகியவர்களின் விபரங்களைப் பெற

6. பாராளுமன்ற உறுப்பினர் குறித்த தகவல்கள், தொகுதி நிலவரங்கள், வாக்களிக்கும் இடங்கள் ஆகியவற்றைக் காண இயலும்.

7. மூத்த அரசியல்வாதிகள் எந்த தேதிகளில் என்ன சொன்னார்கள் (quotes) – அவர்களது வாக்குமூலங்கள் யாவை? என்பன குறித்து அறியலாம்.

பாராளுமன்றத் தொகுதியின் பெயரை உள்ளிட்டால் (input), தொகுதி பற்றிய அனைத்துத் தகவல்களும் நொடியினில் திரையில் மலர்கிறது.

இந்தத் தளமானது ஆங்கிலம் மற்றும் இந்தி – இரு மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

சுட்டி முகவரி : http://www.google.co.in/intl/en/landing/loksabha2009/

Advertisements

Leave a Comment »

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.
Entries and comments feeds.

%d bloggers like this: