இணையத்தில் உலவும்போது கேடு விளைவிக்கும் தளங்களைக் கண்டறிய

April 7, 2009 at 3:36 pm | Posted in Uncategorized | Leave a comment
இணையத் தளங்களில் உலா (surfing) வரும்போது எவையெல்லாம் நல்ல தளங்கள், எவை கேடு விளைவிப்பவை என்பதை நாம் அறியோம்.

ஏதேனும் தெரிந்திராத, அறிந்திராத (unknown) தளத்தைப் பார்வையிடும்போது எப்போதுமே ஒரு பாதுகாப்பில்லாத தன்மையை உணர்ந்திருப்போம்.

ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் நமது பார்வைக்கு நல்ல தளங்களாகத் தெரிகின்றன. ஆனாலும் அவற்றின் உள்ளே குறும்புசெய்யும் விசமத்தனமான, கேடு விளைக்கக் கூடிய நிரல்களை எழுதிப் பொதிந்திருப்பார்கள்.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குற்றம் செய்வபவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். அதே போல உலவியின் நிரலில் உள்ள பிழைகளை அறிந்திருப்பவர்கள் (hackers), அதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதற்கேற்ற எதிர்நிரல் (malicious code) ஒன்றை எழுதி அதை இணையத் தளத்தில் கோர்த்திருப்பார்கள்.

அந்த குறிப்பிட்ட சில தளங்களில் நாம் உலா வரும் வேலையில், அவை நமது கணினியில் பாதகம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும். ஏதேனும் குற்றச் செயல்களில் அந்த நிரல்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் அறியோம்.

நம்மிடம் நல்ல வைரசு எதிர்ப்புத் தொகுப்பான் (anti virusl) இருந்திருக்கும். நாமும் அதை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருப்போம். எனினும் சில நேரங்களில் அதுவும் கையை விரித்துவிடும்.

உலாவரும்போது பாதுகாப்புத் தன்மையை (security) அதிகரிப்பதற்காகவே சிறப்புக் கருவிகள் (tools) சிலவற்றை இங்கே காண்போம்.

மிகப் பயங்கரமான தளங்களை நாம் உலவ முயற்சித்தால் இந்தக் கருவிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து இப்போது தளத்தைப் பார்வையிடலாகாது – அதில் கேடுவிளைவிக்கக் கூடிய ஆபத்து உள்ளது என சிவப்பு அறிக்கை (red alert) விடும்.

நல்ல தளங்கள் எவை? கெட்ட தளங்கள் எவை – என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்திடலாம்.

நம்பகமான உலாவலுக்கு இவற்றை நாளும் பயன்படுத்தலாம்.

உலவியில் தள முகவரியைத் தட்டி Enter அழுத்திய உடனேயே எச்சரிக்கை செய்திடும் கருவிகள் இவை.

இந்தக் கருவிகள் பற்றிய மேலதிக விபரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தித் தெரிந்துகொள்ளவும்.

McAfee Site Advisor

LinkScanner Online

Norton Safe Web

Anti-malware tool by Google

Web Of Trust

Advertisements

Leave a Comment »

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries and comments feeds.

%d bloggers like this: