ஏர்டெல் ப்ராட்பாண்ட் : நுகர்வோர்கள் என்ன பைத்தியக்காரர்களா?

March 6, 2009 at 3:13 pm | Posted in Uncategorized | Leave a comment

ஒவ்வொரு முறையும் நம்மால் தடுக்க முடியாத இடத்தில் தெரிந்தே நடக்கும் அநியாயங்கள் அளவுக்கதிகமான கோபத்தை ஏற்படுத்தி விட்டு நகர்வதுண்டு. அது அச்செயல் ஏற்படுத்தும் விளைவுகளால் மட்டுமல்லாது நம்மால் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகத்தனத்தின் காரணமாக சற்று அதிகமாகவே எதிரொலிக்கும்.  ஏர்டெல் ப்ராட்பேண்ட் தற்போது அறிவித்திருக்கும் Fair Usage Policy யும் அப்படிப்பட்ட ஒரு கோபத்தைக் கிளப்பிச் சென்றிருக்கிறது.

இதன் படி நீங்கள் Unlimited ப்ளானை உபயோகிப்பவராய் இருந்தாலும், உங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு டவுன்லோட் அளவு நிர்ணயிக்கப்பட்டு விடும். உங்களது உபயோகம் அதைத் தாண்டிச் செல்லும் பட்சத்தில் உங்களது ப்ராட்பேண்ட் ஸ்பீடானது, சரி பாதியாக குறைக்கப்படும். (உதாரணத்திற்கு நீங்கள் 512 kbps உபயோகித்தால் 256 ஆக மாறி விடும்). இதே அளவு வேகத்தைதான் உங்களது அடுத்த பில் தேதி வரை நீங்கள் உபயோகிக்க முடியும். ஆனால் பில் மட்டும் உங்களது ஒரிஜினல் ப்ளானுக்கேற்றவாறுதான் வரும். (512 kbps க்குதான் வரும்). மீண்டும் அடுத்த மாதத்திலிருந்து நீங்கள் உங்களது சாதாரண ஸ்பீடிலேயே பயன் படுத்தலாம். ஆனால் நீங்கள் உங்களது உச்ச டவுன்லோடு அளவைத் தாண்டாதவரைதான். இல்லையெனில் மீண்டும் அதே கதைதான்.

ஏர்டெல்லின் இந்த அறிவிப்பானது தனி ஒருவரே அதிக பேண்ட்வித் உபயோகத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதென்று அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறதாமாம். அப்புறம் என்ன வெங்காயத்துக்குடா Unlimited ப்ளான்னு இதைச் சொல்றீங்கன்னு கோபம்தான் ஏற்படுகிறது.

இந்தியாவில் ப்ராண்ட்பேண்ட் ஸ்பீடானது மற்ற நாடுகள் அளவுக்கு இல்லை என்பதும் இப்போது வசூலிக்கப்படும் கட்டணங்களே அதிகமாய் இருக்கிறது என்ற ஒரு மட்டகரமான சூழ்நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை ஏர்டெல் செய்திருக்கிறது. அனைத்து உபயோகிப்பளர்களுக்கும் பயன் படும் வகையில் பேண்ட்வித் வசதி அமைப்பது, அதிக வேகத்தை தரத் தேவையான டெக்னாலஜி விஷயங்களை முன்னெடுத்துச் செல்வது போன்ற விஷயங்களில் அக்கறை காட்ட வேண்டிய ஏர்டெல் தனது கஸ்டமர்களை கொஞ்சமும் மதிக்காமல் இப்படி ஒன்றை முன்னெடுத்துச் சென்றிருக்கிறது.

நீங்கள் நினைக்கலாம். இது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. இது இன்டர்நெட் மூலம் படம், மென்பொருள் போன்றவற்றை தரவிறக்கம் செய்பவர்களுக்குத்தான். ஆகையால் நான் கவலைப்பட தேவையில்லை என்று. இல்லை. இதனால் இன்னும் பலருக்கு பாதிப்புதான்.

Video conferencing/telecommunication

Video streaming

Distribution of legitimate software

Legal distribution of movies, music etc.

Work from home

Connecting businesses

VOIP

For more detailed info: http://afup.broadbandforum.in/how-does-the-fup-aff ect-me

சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் யூடியூபில் ஏதாவது ஒன்றை பார்க்க வேண்டுமென்றாலோ, அல்லது ஏதேனும் பெரிய ஃபைலை பகிர்ந்துக் கொள்ள வேண்டு மென்றாலே நாம் யோசிக்க வேண்டும்.

இன்று இவர்கள் இவ்வளாவுதான் உபயோகப்படுத்த வேண்டும் என்பார்கள். நாளை நாம் எந்த எந்த தளங்களுக்கு போகக்கூடாது என்றும் கட்டளை இடுவார்கள். இதை விட மிக முக்கியமாய் ஒன்று இருக்கிறது. இவர்களே ஒரு கூட்டமாய் சேர்ந்துக் கொண்டு மற்ற எல்லா ISP க்களும் இதை அறிவிக்குமாறு செய்யலாம். தம்மை ஓர் சிறந்த ராஜதந்திரியாய் நினைத்துக் கொண்டு, பயனாளர்களை அற்பர்களாய் பார்க்கும் ஓர் அதி மேதாவித் தனம் இது.

**********

இது குறித்து தெரிந்ததும், உறுதி செய்து கொள்வதற்காக ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் செய்தேன். அவர்கள் மிகத் தெளிவாக “ஆமாம் சார். இது அமலுக்கு ஏற்கனவே வந்து விட்டது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள்.

என்ன ஒரு அலட்சியம். எனக்கோ அல்லது வேறு எந்த ஏர்டெல் பயனாளர்களுக்கும் இது குறித்து ஒரு சின்ன மேசேஜ் கூட தரப்பட வில்லை. எங்களது அனுமதியோ அல்லது ஒரு சின்ன விவரம் கூட தெரிவிக்கப்படாமலேயே தனது பயனாளர்கள் மீது எந்த விதமான கட்டுப்பாடுகளையும் ஏர்டெல் பிரயோகிக்கலாம் போல. எங்களை எல்லாம் பார்த்தா கேனையணுங்க மாதிரியாடா தெரியுது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

இதில் இன்னொரு அழகு என்னவென்றால் அப்படி எனக்கோ அல்லது மற்ற பயனாளார்களுக்கோ எவ்வளவு ஸ்பேஸ் நிர்ணயித்திருக்கிறார்கள் என்று கஸ்டமர் கேரில் எவருக்கும் தெரிய வில்லை. அது 10 GB யாய் இருக்கலாம். 25 GB யாய் இருக்கலாம். வெறுமனே 4 ஆகவும் இருக்கலாம். நாங்கள் என்ன ஏர்டெல்லுடன் செஸ் விளையாட்டா விளையாடிக் கொண்டிருக்கிறோம். எதிராளி எப்படி காய் நகர்த்துவான் என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க.

Man! We are all customers and we all expect some respect from them and don’t want to be treated like slaves.

கடைசியாய் போனை வைப்பதற்கு முன்பு கஸ்டமர் கேரில் சொன்னது இதுதான். “ஏற்கனவே இது குறித்து நீங்கள் அதிகமாய் புகார்களை பெற்றுக் கொண்டிருக்கலாம். எனக்குத் தெரிய வில்லை. ஆனால் உங்களாது இந்த திமிர்த்தனமான நடவடிக்கையை மிக கோபத்துடன் எதிர்ப்பவன் என்று என்ன்னை முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக நாள் உங்களது சேவை எனக்குத் தேவைப்படாது “.

உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை Software installation என்ற ஒன்றே இல்லாமல் கூட இருக்கப் போகிறது. 3D கம்ப்யூட்டர் கேம்ஸ், MS ஆபீஸ், போட்டோ எடிட்டிங் மென்பொருட்கள், ஆடியோ – வீடியோ எடிட்டர்கள், போர்னோகிராபி, டாரண்ட், ஃபைல் ஷேரிங், வீடியோ சாட்டிங் என்று நாம் இணையத்தை உபயோகப்படுத்த ஆரம்பிக்கும் ஒவ்வொரு புள்ளிகளிலும் இந்த டவுன்லோடு ஸ்பேஸ் லிமிட் நம்மை எரிச்சலடைய வைக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாய் என்னை ரௌத்ரம் கொள்ள வைப்பது ஏர்டெல்லின் தனது கஸ்டமர்களின் மீதான அடிமைத்தனமான பார்வை.

இந்த அறிவிப்பு உங்களியும் கோபம் கொள்ள வைக்கிறதென்றால் உங்களது கண்டனக் குரல்களை இங்கேயும் பதிவு செய்யுங்கள். http://afup.broadbandforum.in/

  :-  Adapted from Nandh’s Blog

Advertisements

Leave a Comment »

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.
Entries and comments feeds.

%d bloggers like this: