உங்களுக்காக இரண்டு தமிழ் வலைப்பூக்கள்

March 4, 2009 at 3:07 pm | Posted in Elay's Tamil Posts | 1 Comment

தமிழ்மொழி அருகி ஆங்கில மொழி பரவி வரும் காலக்கட்டத்தில் இது தேவைதானா என்றும் சிலர் நினைக்கக்கூடும். இன்றும் பலர் சரியான உச்சரிப்பு, சரியான இலக்கணப்பயிற்சி இன்றி இருப்பதால் ஆங்கிலத்தில் பேச யத்தனிக்கவே தயங்கும் நிலை உள்ளது. மற்ற எந்த நாட்டினரை விடவும் தெளிவான ஆங்கில இலக்கண அறிவு கொண்டோரும் நம் நாட்டில் தான் என்று பெருமை கொள்ளும் அதே நேரம் , தவறான ஆங்கிலத்தில் பேசியமைக்காக நகைப்புக்கு உள்ளாக்கும் தன்மையும் நம்மவர்களிடம் உண்டென்பதை நீங்களறிவீர்கள்.

 

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி. ஒரு வினைச்சொல்லை வைத்து எத்தனை விதமான வாக்கியங்களுண்டோ அத்தனை விதமான வாக்கிய அமைப்புக்களும் காட்டி , விளக்கங்களும் அளிக்கிறார் ஆசிரியர். ஒலிவடிவமும் உண்டு. என்பதால் நீங்கள் எளிமையாக அதனை உச்சரிக்கவும் பழகலாம். 

 

மற்ற பாடத்திட்டங்களிலிருந்து இது வேறுபட்ட ஒரு முயற்சியாக இருக்கின்றது. மொழிபெயர்ப்பில் சிறிதே வித்தியாசத்தை உணர்வீர்கள். ஓராண்டு நிறைவைக்கொண்டாடி இருக்கும் ஆங்கிலம் கற்கலாம் வாங்க வலைப்பதிவில் இலக்கணங்கள் மட்டுமல்லாமல், உச்சரிப்பு, காய்கறிகள் , பழங்கள் என்று அவற்றுக்கு சமமான ஆங்கில பெயர்கள் என்று ஆங்கிலத்தில் எல்லா வகையிலும் சிறப்புற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் அருணுக்கு வாழ்த்துக்கள்.

———————————————————————————————-

நன்றாகத் தெரிந்தவர்களை ஹலோ சுகமா? எனக் கேட்பது வழக்கம். இது பல வேளைகளில் ஒரு சம்பிரதாய வார்த்தையாகக் கூட இருக்கலாம்.  ஆனாலும் இதில் ஒரு சினேகம் இருக்கும். உரிமை இருக்கும். அதே போல், அதே உரிமை, சிநேகத்துடன் ‘ ஹாய் நலமா ? ‘ என இவ்வலைப்பூவில் கேட்பவர் ஒரு வைத்தியர்.

 

இலங்கையின் புகழ்மிகு வைத்தியர்களில் ஒருவரான டாக்டர்.எம்கே .முருகானந்தன். அதனாலேதான் நட்பு, உரிமை என்பதற்ம் மேலா அக்கறையோடு எமது உடற் கூறுகள் தொடர்பான சிக்கல்கள், நோய்கள் என்பவற்றுக்கான விளக்கங்கள், ஆலோசனைகள் வழங்க்கப்படுகின்றன.

 

 

இலகு தமிழில் வைத்தியக் குறிப்புக்களை அழகா எழுதிவரும் டாக்டர் முருகானந்தனின்  வலைப்பூ, வாழ்க்கையில் நமக்கு உடனிருக்கும் வைத்தியக் கையேடு என்லாம். டாக்டரின்  இந்த வலைப்பூவுக்கு நீங்கள் றநாயாளியாகச் செல்ல வேண்டியதில்லை, நட்பாகச் செல்லலாம். அங்கே அவர் உங்களை நட்பாகக் ஹாய் (சொல்லி) நலமா? என அன்பாக விசாரிப்பார்.

Advertisements

1 Comment »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. Nice your view. It is really useful sites for peoples.

    Thanks a lot.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.
Entries and comments feeds.

%d bloggers like this: